ETV Bharat / state

கண் இமைக்கும் நேரத்தில் ராயல் என்ஃபீல்ட் வாகனம் திருட்டு - வெளியான சிசிடிவி வீடியோ - police investigation

சென்னை: கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது.

royal enfield
royal enfield
author img

By

Published : Aug 24, 2020, 11:48 PM IST

சென்னை அயனாவரம் பி.கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 22ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து பெருமாள் அயனாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பெருமாளின் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் முகக் கவசத்துடன் வரும் இரண்டு நபர்கள், மக்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டபடியே, புல்லட் வாகனத்தை கண் இமைக்கும் நேரத்தில் திருடிச் செல்லும் காட்சி பதிவானது.

வெளியான சிசிடிவி வீடியோ

திருட்டு சம்பவம் நடந்து கொண்டிருந்த போதே தெரு முனையில் போக்குவரத்து காவல் ரோந்து வாகனம் ஒன்று கடந்து செல்வது அதில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: காவலர் கொலை குறித்து அரசியல் கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.