ETV Bharat / state

சென்னையில் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது - சென்னையில் ரவுடி கைது

சென்னையில் தகராறில் ஈடுபட்ட நபரின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது

author img

By

Published : Dec 9, 2021, 10:40 PM IST

சென்னை: தேனாம்பேட்டை தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் அருள். இவரது தங்கை தேவி. இவரது கணவர் சுரேஷ் ஆட்டோ ஓட்டுநராக இருந்துவருகிறார். கடந்த 7ஆம் தேதி அருள் கண்ணகி நகரில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்குச் சென்றபோது, அந்தப் பகுதி ரவுடியான சதீஷ் என்பவருடம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அப்போது இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் சதீஷ் கூட்டாளி ஒருவருக்கு வெட்டுக்காயம் விழுந்தது. ஆனால் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

இதனால் பழிவாங்க காத்திருந்த சதீஷ் கும்பல், நேற்று (டிசம்பர் 8) தேனாம்பேட்டையில் வைத்து அருளின் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடினர். காயமடைந்த அருள் தலையில் கடப்பாகல் விழுந்துவிட்டதாக நடந்ததை மாற்றிக் கூறி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தார்.

வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது

மேலும் தீஞ்ச சதீஷ் கும்பல், அருள் வீட்டின் கதவை உடைத்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்துச் சென்றனர். இதில் வீட்டில் இருந்த பொருள்கள் முழுவதுமாக நாசமடைந்து அருகிலிருந்த மின்சார வயர்களிலும் தீப்பற்றியதால் நள்ளிரவு நேரத்தில் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து அருளின் தங்கை தேவி வீட்டிற்கு கும்பல் சென்று பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். பின்னர் தேவியின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் தீஞ்ச சதீஷை பள்ளிக்கரணையில் வைத்து கைதுசெய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருக்கக்கூடிய அவரது கூட்டாளிகளையும் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப் திருமண புகைப்படம் கசிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.