ETV Bharat / state

28 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் வெளிவந்த ராபர்ட் பயஸ்! - ராபர்ட் பயாஸ் பரோல்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், பரோலில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

robert bayas released on parole after 28 years imprisonment
author img

By

Published : Nov 25, 2019, 12:27 PM IST

Updated : Nov 25, 2019, 12:34 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, பரோல் கோரிய விண்ணப்பத்தில் தங்க இருக்கும் முகவரியை தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும்; தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் பயஸூக்கு பரோல் வழங்க ஆட்சேபம் இல்லை என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 30 நாட்கள் சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ராபர்ட் பயஸூக்கு பரோல் வழங்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். பரோல் பெற்றபின், ஊடங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது எனவும்; அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசக்கூடாது எனவும் நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்தனர்.

இதற்கிடையே, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் அண்மையில் பரோலில் வெளிவந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை புழல் சிறையிலிருந்து ராபர்ட் பயஸூம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறைத் தண்டனை பெற்று 28 ஆண்டுகள் ஆன பின், கேட்ட முதல் பரோலிலேயே ராபர்ட் பயஸ் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருமண விழாவில் பறை ஒலித்த பேரறிவாளன்!

Last Updated : Nov 25, 2019, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.