நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று 2020 டிசம்பர் 29ஆம் தேதி அறிவித்தார்.
ரஜினியின் இந்த முடிவை அரசியல் கட்சியினர் பலரும், அவரது நலனை கருத்தில் கொண்டு வரவேற்றனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் நான்கு மாவட்ட செயலாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர். கணேசன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ். சீனிவாசன் ஆகிய நான்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்
இதையும் படிங்க: மந்தை குளம் கண்மாய் தூய்மைப் படுத்தும் பணி தொடக்கம்