சென்னை: தமிழ் திரையுலகில் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியில் தான் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தலைவர். இப்படி 24 துறையும் சேர்த்து பெப்சி என்று அழைக்கப்படுகிறது. அதாவது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சம்மேளனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.
கடந்த முறை வெற்றி பெற்ற ஆர்.கே. செல்வமணி தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இவரின் பதவிக் காலம் தற்போது முடிவு அடைந்தது. இதனை அடுத்து சம்மேளனத்திற்கு தேர்தல் இம்மாதம் 28ம் தேதி வடபழனியில் உள்ள அவர்களது சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மீண்டும் ஆர்.கே. செல்வமணி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்நிலையில் தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் 2023-2026 ஆண்டுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுவதாக அறிக்கப்பட்டிருந்த நிலையில் தலைவர் பதவிக்கு ஆர்.கே செல்வமணியைத் தவிர யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதே போல்
செயலாளர் பதவிக்கு சுவாமிநாதன் மற்றும் பொருளாளர் பதவிக்கு செந்தில் குமரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ள நிலையில் யாரும் போட்டியிட முன் வராததால் அவர்களும் வெற்றி பெற்று உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் திட்டமிட்ட படி இம்மாதம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. ஆர்கே செல்வமணி தலைமையிலான அணி பெப்சி தொழிலாளர்கள் நலனுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து அவர்களுக்கு ஓய்வு ஊதியம் மற்றும் பிற பலன்கள் கிடைக்க சிறப்பாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Rudhran: ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்திற்கு நீதிமன்றம் தடை!