ETV Bharat / state

மின் பராமரிப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்.... - மின் பராமரிப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின் பராமரிப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூன்.15)  நடைபெற்றது.

மின் பராமரிப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்

author img

By

Published : Jun 16, 2022, 7:10 AM IST

சென்னை மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஏற்கனவே இருந்த 9 மண்டலங்களுடன் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட 3 மண்டலங்களையும் சேர்த்து 12 மண்டலங்களில் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொண்டார்.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கும், மின் பராமரிப்பு பணிகளான மரக்கிளைகள் வெட்டுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றுதல், பழுதடைந்த மின் பகிர்மான பெட்டிகளைச் சரி செய்வது ஆகிய பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

மின் பராமரிப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்
மின் பராமரிப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் வடிகால் பணிகளின் காரணமாக புதை வடங்களில் ஏற்படும் தற்காலிக பழுதினை உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக (RDSS) திட்டத்தின் மூலம் விவசாய மின் இணைப்புகள் அதிகமாக உள்ள மின் பாதைகளைத் தனியாகப் பிரித்து புதிய விவசாய மின் பாதை ஏற்படுத்துதல், மின்னகத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

2022-2023 ஆம் ஆண்டில் குறியீட்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 50,000 விவசாய மின் இணைப்புகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மின் தளவாட பொருட்களின் இருப்பு, தேவை மற்றும் மின்தடை ஏற்படின் உடனடியாக நிவர்த்தி செய்து நுகர்வோருக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை செய்தல். பழுதடைந்த மின் அளவிகள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக மாற்றுதல் மற்றும் நிலுவையில் உள்ள மின் நுகர்வு கட்டணங்களை வசூல் செய்வதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் மேலே செல்லும் மின்கம்பிகளை புதை வடங்களாக மாற்றும் பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மின்சாரத்துறை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் மா.சிவலிங்கராஜன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'ஸ்டாலினின் நடவடிக்கையை கொச்சைப்படுத்துவதா?'..கர்நாடக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.