ETV Bharat / state

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு - கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதிலடி - வருவாய் துறை அமைச்சர்

அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழ்நாடு மக்கள் மறக்கவில்லை என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

rb udhayakumar  kkssr ramachandran  kkssr ramachandran reply to rb udhayakumar  revenue minister  kkssr  revenue minister kkssr ramachandran  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  ஆர்.பி.உதயகுமார்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  வருவாய் துறை அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாருக்கு பதிலடி கொடுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்
author img

By

Published : Nov 9, 2021, 10:40 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை அதிமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆய்வுக் கூட்டம் செயல் வடிவம் பெற வில்லை என்று ஆர்.பி.உதயகுமார் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று (நவ.8) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறக்கத்தில் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே பேட்டி அளித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நான்கு முறை அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அறிவிப்பு மட்டுமின்றி செயலில் திமுக

ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஐந்து மாத காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மிகப்பெரிய அளவில் தூர்வாரியதன் விளைவாக சாலைகளில் மழை நீர் தேங்கும் அவலம் குறைந்துள்ளது. தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி அலுவலர்கள், அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகளின் உதவியுடன் வெளியேற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் பருவமழை குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டம் செயல் வடிவம் பெற வில்லை என்று உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். பருவமழை குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்த உடனேயே, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதே போல் தேர்தலுக்கு முன்பு அறிவித்த திட்டங்களை செய்து கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சட்டப்பேரவை 110 - ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளை போல் செயல் வடிவம் பெறாமல் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பேச வேண்டாம்.

உயர்நிலை கண்காணிப்புக் குழு

சென்னை எழிலகத்தில், பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் நவம்பர் ஏழாம் தேதி வருகை புரிந்து ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கியதைக் கூடத் தெரியாமல் பேட்டி அளித்துள்ளார்.

2015 - ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு ஏற்படுத்திய பாதிப்பை போல் இல்லாமல், இந்த எரியை கண்காணித்து சரியான அளவில் மழை நீரை வெளியேற்றுவதற்கு ஒரு உயர்நிலை கண்காணிப்புக் குழுவை ( Expert Committee ) தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்தியுள்ளார். உங்கள் ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு மக்கள் முழுவதும் இன்னும் மறக்கவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி அமைச்சர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உணவுப் பொருட்களை வழங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் மக்கள் சந்தித்த அல்லல்கள்

அறிவியல் யுகத்தில் வடகிழக்குப் பருவமழையை பற்றி அரசு கனிக்கத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் உதயகுமார். வடகிழக்குப் பருவமழை தொடங்கிய அக்டோபர் 26 ஆம் தேதி முதல் இன்று வரை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கேற்ப தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

அறிவியலில் அதிக நாட்டம் கொண்ட அவர்களது ஆட்சியில் மழை மற்றும் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் பட்ட சிரமங்கள், குறிப்பாக 10 நாட்கள் மின்சார வசதியின்றி மக்கள் பட்ட அல்லல்களை நாடு இன்னும் மறக்கவில்லை. வீடுகளில் குடியிருந்தவர்கள் மேல் மாடியில் உட்கார்ந்து கொண்டு உணவிற்காக ஏங்கியதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக-வை ஆட்சியில் மக்கள் அமர்த்தினார்கள். ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியையும், அ.தி.மு.க. - விற்கு படுதோல்வியையும் அளித்துள்ளார்கள். எனவே இனியாவது உதயகுமார் களச்சூழ்நிலையை அறிந்து கொண்டு பேட்டி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி - களத்தில் ஈடிவி பாரத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.