ETV Bharat / state

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஓய்வு - சிலை கடத்தல்

சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஓய்வு பெறும் விழா நடைபெற்றது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஓய்வு

author img

By

Published : Dec 31, 2022, 11:04 AM IST

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஓய்வு

சென்னை: தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஓய்வு பெறும் விழா, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். டிஜிபி ஜெயந்த் முரளிக்கு அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.

அப்போது மேடையில் பேசிய டிஜிபி ஜெயந்த் முரளி ”இந்த 30 வருட பணி என்பது ரோலர் கோஸ்டர் போல் உணர்ச்சிகள் என் வாழ்க்கையில் இருந்தது. அதன் மூலம் பல அனுபவங்கள் பெற்றுக் கொண்டேன். இதற்கு உடனிருந்த அனைவருக்கும் நன்றி. எனக்குடிஜிபியாக பதவி உயர்வு தந்த முதலமைச்சருக்கு நன்றி. தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பிறகு சுதந்திரமாக என் பணியை செய்தேன். நான் புத்தகம் எழுதுவது மற்றும் மரத்தான் போன்றவற்றில் பங்கேற்பது மட்டுமல்லாமல் சுதந்திரமாக பணியையும் செய்தேன்.

ஒவ்வொரு வருடமும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 259 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அந்த வளர்ச்சியில் எனக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை நினைகும் போது பெருமையாக உள்ளது.

ஹாலிவுட் படம் ஒன்றில், 2050 ஆம் ஆண்டு காவல்துறை தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என காட்டப்பட்டிருக்கும். அந்த படத்தில் குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள், தற்போது தமிழ்நாடு காவல்துறை பெற்றிருக்கிறது. யுனைடெட் நேஷன் விதிப்படி பத்தாயிரம் பேருக்கு 222 காவலர்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 150காவலர் என்ற நிலை உள்ளது. தொழில்நுட்பத்தை காவல்துறையில் மேம்படுத்துவதன் மூலம் இதை ஈடு செய்ய முடியும்.

கடந்த 1991 ஆம் ஆண்டு பணிக்கு சேரும்போது என் அலுவலகத்தில் கணினி இல்லை, ஆனால் தற்போது கணினி இல்லாத அலுவலகமே இல்லை. தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் மொபைல் போன்கள் இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. காவல்துறையிலும் தொழில்நுட்பத்தை வேகமாக ஏற்றுக் கொண்டு குற்றவாளிகளை விட நாம் ஒரு படி முன்னதாக செயல்பட வேண்டும்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இதுபோன்று பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். சமீபமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ’வாய்ஸ் டெக்னாலஜி’ போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், சைபர் குற்றங்களை பெரிதும் குறைக்கலாம். ஆன்லைன் போன்ற தளங்களில் பல்வேறு விதமாக வரும் குற்றங்களை தடுக்கவும் எதிர்காலத்தில் காவல்துறை தயாராக வேண்டும்” என தெரிவித்தார்.

இதன் பிறகு பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ஜெயந்த் முரளி குறித்தும் அவரது குண நலன்கள் மற்றும் காவல் துறையில் அவர் ஆற்றிய பணி குறித்தும் பாராட்டி பேசினார். தமிழ்நாடு காவல்துறையின் கடந்த கால தன் நிகழ்கால மற்றும் எதிர்காலம் குறித்து ஜெயந்த் முரளி தெரிவித்ததாகவும். பல்வேறு தொழில்நுட்பங்கள் தமிழக காவல்துறையில் கொண்டுவரப்பட்டதை சுட்டிக்காட்டிய டிஜிபி, டெக்னாலஜி மட்டுமே சமூகப் பிரச்சினைகளை தீர்க்க சாவியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.