சென்னை, பல்லவன் சாலை அருகேயுள்ள போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஏராளமானோர் ஒன்றுசேர்ந்து பத்து அம்ச கோரிக்கைகைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அவர்கள் மாதம் முதல் தேதியே ஓய்வு ஊதியம் வழங்கப்பட வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கர்சன் கூறுகையில், "ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் மின்சாரத் துறை ஊழியர்களுக்கும் பிரதி மாதம் ஒன்றாம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு மட்டும் 10ஆம் தேதிக்கு மேல்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இதனை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுவருகிறது. போக்குவரத் துறை இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
நாளை கோட்டை முற்றுகைப் போராட்டம் - போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அமைப்பு