ETV Bharat / state

’கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்’ - covid 19

சென்னை : கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத் துறையின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மண்டல சிறப்புக்குழு அலுவலர்கள் கடுமையாக கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

radhakrishnan
radhakrishnan
author img

By

Published : May 13, 2020, 9:51 AM IST

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல சிறப்புக் குழு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அம்மா மாளிகையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "சென்னை மாநகராட்சியில் கரோனா பாதிப்பாளர்கள் 4 ஆயிரத்து 371 நபர்கள் வசித்த 690 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. பொது சுகாதாரத் துறையின் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 628 கட்டுப்பட்ட பகுதிகளில் சுமார் 4 லட்சத்து 25ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. முதியோர் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி, தாய்மார்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: ‘மலேசியாவில் இருப்பவர்களை மீட்கலாம்; மகாராஷ்டிரா முடியாதா?’ - உயர் நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.