இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத் தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கடன் தவணை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்ட போது, ஒத்திவைக்கப்பட்ட தவணைத் தொகைகளுக்கான வட்டி முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.
ஆனால், வங்கிகளோ அதற்கு மாறாக, தொகை பெற்ற அசலுடன் வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும் என கூறி வருகின்றன. இப்போது கூடுதலாக 3 மாதங்களுக்கு கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாதக் கடன் தவணையை சேர்த்து கூடுதலாக வட்டி செலுத்த வேண்டும் என்ற நிலைமை உள்ளது. இது கடன்தாரர்களை மீளவே முடியாத கடன் சுமையில் ஆழ்த்தி விடும்.
இது முழுமையான தீர்வு அல்ல. ஆகவே மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது வட்டித் தள்ளுபடி வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்பிசி பிரிவினருக்கு சமூகநீதி வழங்க வேண்டும்'- ராமதாஸ் வேண்டுகோள்