சென்னை தலைமைச்செயலகத்தில் தாம்பரம் - திருச்சி தேசிய சாலைக்கு மாமன்னர் ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டுமென தேசிய முன்னேற்றக்கழகத்தின் தலைவர் சிவா முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு இன்று (ஜூன் 10) மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சிவா, ”தாம்பரம் - திருச்சி தேசிய சாலைக்கு மாமன்னர் ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும். தமிழ் மண்ணில் பல்வேறு வெற்றிகளைக் குவித்து உலகம் முழுவதும் வெற்றிகளைக் குவித்த ராஜராஜ சோழன் மாபெரும் வீரனாகத் திகழ்ந்திருக்கிறார்.
அவருடைய பெயரை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் தாம்பரம் முதல் திருச்சி வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். மேலும் அவருக்கு மணிமண்டபம் கட்ட கடந்த மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:செங்கல்பட்டு கொலை விவகாரம்; கணவர் முகத்தை காண்பிக்கவில்லை: மனைவி வேதனை