சென்னை: சென்னை கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அந்தப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து தனியார் பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக், தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், “பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிர்வாகமும், பாலியல் புகார்களுக்குப் பொறுப்பேற்கும் விதமாக, அப்பள்ளியின் நிர்வாக அறக்கட்டளையை கலைத்துவிட்டு, அப்பள்ளியை அரசு தன்வசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், மறைக்கப்பட்டிருக்கும் பல பாலியல் தொல்லை, நிதிமோசடி, ஆசிரியர் ஊதிய முறைகேடு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் இடங்கள் நிரப்புதல், மாணவர் கல்வி கட்டணம், பாதுகாப்பு அம்சங்கள், வரி முறைகேடுகள், நிலம், கட்டடம், வாகன உரிம முறைகேடுகள், ஜாதி மத பாரபட்சம் போன்ற பல கோணங்களில் இப்பள்ளியை விசாரிக்க வேண்டும். சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளதால் இனியும் காலதாமதம் செய்யாமல் இப்பள்ளியை அரசு தன்வசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: PSSB school பாலியல் வழக்கு: ராஜகோபாலனின் நண்பர்களை விசாரிக்க முடிவு!