சென்னை: நாட்டில் 73ஆவது குடியரசு தினவிழா வரும் ஜன.26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜன.20, 22, 24 ஆகிய தேதிகளில் மெரினா கடற்கரை சாலையில் வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து ஜன.20ஆம் தேதி முதல் நாள் ஒத்திகை நடைபெற்ற நிலையில், இன்று(ஜன.22) காலை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே இரண்டாம் நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆர்.பி.எப், காவல்துறை, தீயணைப்பு படை வீரர்களும் ஒத்திகை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல்துறையின் இருசக்கர வாகன அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
கரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும், பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திருச்சி ஜல்லிக்கட்டு - துள்ளி வரும் காளைகளை அடக்க முயற்சிக்கும் வீரர்கள்!