ETV Bharat / state

பாலியல் தொழிலுக்கு வர மறுத்த திருநங்கையின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்!

சென்னை: திருநங்கையை பாலியல் தொழிலுக்கு அனுப்ப மறுத்த அவரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Death threats of transgender
Death threats of transgender
author img

By

Published : Dec 21, 2019, 4:36 AM IST

சென்னை குன்றத்தூர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருநங்கைகளின் தலைவி என்று அழைக்கப்படும் மகா உட்பட 15 திருநங்கைகள் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்கள் நாள்தோறும் சம்பாதிக்கும் பணத்தை அவர்களின் தலைவி மகாவிடம் கொடுத்து பங்கு பிரித்துக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பங்கு தகராறில் எட்டு திருநங்கைகள் ஒன்று சேர்ந்து சௌமியா என்ற திருநங்கையை மாங்காடு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்த திருநங்கையின் சடலத்தை உடற்கூறாய்வு செய்ததில் திருநங்கை கொல்லப்பட்டது தெரியவந்தது.

இக்கொலையில் சம்பந்தப்பட்பட்ட மனிஷா, வசந்தி, சாந்தி உட்பட எட்டு திருநங்கைகளைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்து சொந்த வீட்டிற்குச் சென்ற திருநங்கை மனிஷாவை மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என திருநங்கைகளின் தலைவி என்று அழைக்கப்படும் மகா, கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மனிஷா தனது குடும்பத்தினருடன் புகார் அளித்துள்ளார்.

அப்போது, திருநங்கை மனிஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘என்னை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியும், கடையில் பிச்சை எடுக்கவைத்தும் மகா கொடுமைப்படுத்தினார். நாள்தோறும் குறைந்தது 4 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டும் எனவும் வீட்டை விட்டுச் சென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வந்தார்’ என்றார்.

புகார் அளிக்க வந்த திருநங்கை

மேலும், சிறைக்குச் சென்று தனது வீட்டிற்குச் சென்ற பின்பு தினமும் மகா உட்பட 3 திருநங்கைகள் என்னை தொழிலுக்கு அழைத்தும் வர மறுத்ததால் எனது தாய், தங்கையை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது வீட்டை விற்பனை செய்து 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து பலமுறை குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகக் கூறினார். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும், கொலை மிரட்டல் விடுத்த திருநங்கை மகா, அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது!

Intro:Body:பங்கு தகராறில் திருநங்கையை கொலை செய்து கல்குவாரி குட்டையில் வீசிய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற திருநங்கை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரப்பரப்பு புகார்.

சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகை எடுத்து திருநங்கையின் தலைவி மகா உட்பட 15 திருநங்கைகள் ஒன்றாக வசித்து வந்தனர்.இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை தலைவி மகாவிடம் கொடுத்து பங்கு பிரித்து கொள்வர்.இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பங்கு தகராறில் சௌமியா என்ற திருநங்கையை மாங்காடு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் 8 திருநங்கைகள் அழைத்து சென்று அடித்து கொன்று விட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனையில் கொலை செய்தது தெரியவந்து மனிஷா,வசந்தி,சாந்தி உட்பட 8 திருநங்கைகளை கைது செய்தனர்.பின்னர் சிறைக்கு சென்றுவிட்டு ஜாமினில் வெளிவந்து சொந்த வீட்டிற்கு சென்ற திருநங்கை மனிஷாவை மீண்டும் தொழிலில் ஈடுபட வேண்டும் என தலைவி மகா கொலை மிரட்டல் விடுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மனிஷாவின் குடும்பத்தினருடன் புகார் அளித்தார்.

பின்னர் பேசிய திருநங்கை மனிஷா

குன்றத்தூர் பகுதியில் வாடகை எடுத்து வீட்டில் வசித்த போது திருநங்கை மகா தன்னை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியும்,கடையில் பிச்சை எடுக்க வைத்தும் கொடுமைப்படுத்தினார்.மேலும் தினமும் குறைந்தது 4000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டும் எனவும் வீட்டை விட்டு சென்றால் கொலை செய்து விடுவதாக கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறினார். மேலும் சிறைக்கு சென்று தனது வீட்டிற்கு சென்ற பின்பு தினமும் மகா உட்பட 3 திருநங்கைகள் என்னை தொழிலுக்கு அழைத்தும் வராததால் தனது தாய் மற்றும் தங்கையை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார். மேலும் வீட்டை விற்று 2லட்சம் தர வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்து செல்வதாகவும் கூறினார். இது தொடர்பாக பல முறை குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக கூறினார். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரியும்
கொலை மிரட்டல் விடுத்த திருநங்கை மகா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.