ETV Bharat / state

குடியிருப்புகளில் ஆய்வு - செப். 29இல் அறிக்கை வெளியீடு - தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடியிருப்பு குறித்த ஆறிக்கை

தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடியிருப்புகளில், ஐஐடி வல்லுநர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் இறுதி அறிக்கை செப்டம்பர் 29ஆம் தேதி அன்று முதலமைச்சரிடம் தாக்கல்செய்யப்படவுள்ளதாக, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தா மோ அன்பரசன்
தா மோ அன்பரசன்
author img

By

Published : Sep 28, 2021, 10:18 AM IST

சென்னை: தாமோ அன்பரசன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர், “சென்னை புளியந்தோப்பில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கட்டுமானத்தின் தரம் குறித்து ஐஐடி வல்லுர்கள் அடங்கிய குழு ஆய்வுசெய்தது.

வல்லுநர் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 17ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்ட நிலையில், முழுமையான அறிக்கையை நாளை (செப். 29) முதலமைச்சரிடம் தாக்கல்செய்யப்படவுள்ளது.

பழய குடியிருப்புகளைப் புதுப்பிக்கும் பணி

தமிழ்நாட்டில் 30 - 40 ஆண்டுகள் பழமையான, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட 7,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதே இடத்தில் குடியிருப்புகளை இடித்து மீண்டும் புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் கட்டப்பட்டு, மக்கள் குடியிருக்கும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், குடியிருப்புப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் நீர்நிலைப் பகுதிகளில் 54 ஆயிரம் இடங்களில் குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலர் தலைமையில் செயலாக்கக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுசெய்து பட்டாக்கள் வழங்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முதல்கட்டமாக ஆறாயிரம் பேருக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ஊரகத் தொழில் துறை சார்பில் சேலத்தில் 85 கோடி ரூபாய் செலவில் நவீன உபகரணங்களுடன்கூடிய ஜவ்வரிசி கிடங்கு முதலமைச்சரால் செப்டம்பர் 29இல் திறந்துவைக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.