ETV Bharat / state

'மக்களே! உங்களை தவிர கரோனாவிலிருந்து வேறு யாரும் உங்களை காக்க இயலாது' - அரசு மருத்துவர் சங்கம்

author img

By

Published : Jun 14, 2020, 3:18 PM IST

சென்னை: கரோனா வைரஸால் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து கரோனாவின் தாக்கம் குறித்தும், மருத்துவர்களின் நிலை குறித்தும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைமைக் கழக செயலாளர் சந்திரசேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

doctors-association-chandrasekhar
doctors-association-chandrasekhar

அதில், "என் உயிரினும் உயிரான மருத்துவத்துறை சொந்தங்களே! இது சத்தியமாக உங்களுக்கான பதிவு! உங்களுக்கு மட்டுமான பதிவு!
உருக்கமான, நெருக்கமான பதிவு! அரசியல் வாடையுடன் எழுதப்பெற்ற பதிவு, ஏனெனில் நம்ம டிசைன் அப்படி! அப்பதான் நம்மாளு கேட்பான்! ஏன்னா? நம்ம டிசைன் அப்படி! உலகெங்கும் உலுக்கி போட்ட “கரோனா“ நம்மை ரொம்ப சாதாரணமாகதான் அனுகியது, பல கருனைகளையும் காட்டியது.

ஆனால் இனி அப்படி இருக்க போவதில்லை என்பதை நடக்கும் சம்பவங்கள் நன்றாகவே காட்டுகின்றன. யாருக்கு தெரிகிறதோ இல்லையோ, ஆனால் நமக்கு இது நம் கண் முன்னே நடக்கிறது. அதுவும் நம்மை நோக்கியே நடக்கிறது. ஏனென்றால், வெளியே சாதாரணமாக சுற்றுபவர்கள் பாதிப்பு அடையும் போது நம்மிடம்தான் வருகிறார்கள்.

ஆனால் வெளியிலிருப்பவர்களுக்கு அது தெரியாது. அவர்களிடம் இருந்து ஒரு நபரோ ஒரு கூட்டமோ பிரிந்து சென்றால் கூட அது தெரியாது, அவர்களை குற்றம் சொல்லி ஒன்னும் இல்லை, நம்ம மக்கள் நெருக்கம் அப்படி!. விதி வலியது, அதை விட கரோனா கொடியது! சாதாரணமாக சுற்றும் அனைவரும், அவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களும், பெரியவர்களும், பிஞ்சுக் குழந்தைகளும் கடைசியாக நம்மிடம்தான் வருகிறார்கள்.

முன்பு போல இல்லை இப்போது, அறிகுறி வந்து ஓரிரு நாள்களில் மூச்சு திணறி காற்றுக்காக ஏங்கி, ஏங்கி இறுதி மூச்சை விடும்போது நமது மூச்சு ஒவ்வொரு தடவையும் நின்று வருகிறது. ஒரு தடவை வைரஸோடு வந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், நித்தம் நித்தம் வைரஸ் பாதிப்பை நேரடியாக கையாளும் நமது நிலைமை?. காற்றின் நிறைவான அளவு (saturation) நமக்கு குறைவது தெரியாமலேயே போகும் நிலைமை! இறுதியில் செயற்கை சுவாசம் மட்டுமே.

உங்கள் பாதுகாப்பு முழுவதும் உங்களை காக்கும். அலட்சியம் வேண்டாம் . அருகில் யாரும் பேச வர வேண்டாம். கூடிப் பருக வேண்டாம். கூட்டாஞ்சோரு வேண்டாம். தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தனியாக இருக்கப் பழகி கொள்ளுங்கள். நீங்கள்தான் இப்போது இந்த அப்பாவி மக்களுக்கு தேவை. கொத்து கொத்தாக பாதிக்கப் போகிற இந்த அப்பாவி மக்களை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. நம்மை விட்டால் நமது குடும்பத்திற்கும் யாரும் இல்லை என்ற சுயநலம் இங்கு வேண்டும்.

சுயநலத்தில்தான் இந்த பொது நலமும் உள்ளது. நீங்கள் நினைப்பது போல இப்போ சாதாரணாமாக இல்லை. ஆளுமையான ஒரு மருத்துவமனை கண் கலங்க வைக்கிறது. வெளி தூர தேசத்தில் நடப்பது நடந்தது நமக்குமா? என்று உணர வைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கிறது. அய்யோ! இது எங்கு போக போகிறதோ!. என்னருமை உயிரினும் உயிரான மருத்துவ சொந்தங்களே! தாங்களை காத்து கொள்வீர்! நீங்கள் மட்டும்தான் உங்களுக்கு ஆதரவு, இனி எதிரில் உங்கள் குறைகளை கவனிப்போடு கேட்க யாரும் இல்லை. இது அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்!

மருத்துவராய், செவிலியராய், பணியாளராய் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முகக் கவசமும், பாதுகாப்பு உடையும், கிருமி நாசினியும் மட்டுமல்ல, தங்களின் மனதிடமும் உங்களை அரணாய் காக்கும். ஒவ்வொரு நாளும் பணிக்குச் செல்லும் போதும் ஒரு போர் வீரராய் கவச உடைகளுடன் கரோனா எதிரியை எதிர்கொள்ள தயாராவோம். நித்தம் நித்தம் போர். “எதிரியையும் அழிக்க வேண்டும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்“ என்ற பாகுபலி வசனம் போல இது சினிமா இல்லை. நிஜம்! நம் கண்முன்னே நடக்கும் நிஜம்.

இங்கு ஒரு மாபெரும் யுத்தம் நடக்கிறது, களத்தில் பலர் காப்பாற்றப்படுகிறார்கள் பலர் வீழ்கிறார்கள். பல போர் வீரர்களும் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் வீர மரணம் அடைகிறார்கள். இதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்!. ஒரு பெரும் யுத்தம் நடக்கிறது என மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்! பல போர் வீரர்கள் வெளி மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கில் வந்து சென்னை மாநகரின் பல விடுதிகளில் தங்கி உள்ளனர் என்பதை தெரியப்படுத்துங்கள்! மக்களுக்கு இந்த கரோனா போரின் கோரத்தாண்டவத்தை தெரியப்படுத்துங்கள்.

அறிவார்ந்த சமூகமாய் ஓரணியில் நின்று இந்த கரோனா போரில் வெல்வோம். அவசியமாயின் வெளியே வருவோம். சுய ஊரடங்கை அமல்படுத்துவோம் என மக்களே சொல்லும் அளவிற்கு இந்த செய்தியை மக்களிடம் கொண்டுச் செல்வோம். என் உயிரினும் உயிரான மக்கள் செல்வங்களே! உங்களை தவிர யாரும் உங்களை காக்க இயலாது. இனி இது உங்கள் கையில்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசு அலுவலருக்கு கரோனா - சக ஊழியர்களுக்குபரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.