ETV Bharat / state

இராவணகோட்டம் எந்த சமுதாயத்தினரையும் இழிவுபடுத்தவில்லை - தயாரிப்பு தரப்பில் விளக்கம்! - sandhanu

இராவண கோட்டம் படம் குறித்து தயாரிப்பு தரப்பு பத்திரிகையாளர்களிடம் விளக்கமளித்துள்ளது.

இராவண கோட்டம் படம் குறித்து தயாரிப்பு தரப்பு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கமளித்துள்ளது.

author img

By

Published : May 11, 2023, 6:08 PM IST

இராவண கோட்டம் படம் குறித்து தயாரிப்பு தரப்பு பத்திரிகையாளர்களிடம் விளக்கமளித்துள்ளது

சென்னை: கண்ணன் ரவி தயாரிப்பில் மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள திரைப்படம், இராவண கோட்டம். இப்படத்தில் ஷாந்தனு, ஆனந்தி, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களைப் பற்றிய அரசியலை இப்படம் பேசுகிறது. இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டது.

படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தில் காமராஜரை இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். கருவேல மரங்களின் விதை காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் தூவப்பட்டதாகவும்; அதற்கு காமராஜர் தான் காரணம் என்பதுபோல் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரை உயர்த்தியும் மற்ற சமுதாயத்தினரை தாழ்த்தியும் காட்டப்பட்டுள்ளது என விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறும்போது, ''ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்கள் அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டது. இதனால் அம்மாவட்டத்தில் தற்போது வரை நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தவில்லை. நீண்ட காலமாக சாதி அரசியல் அங்கு மறைந்துள்ளது. இதனை பின்னால் இருந்து சிலர் தூண்டிவிடுகின்றனர். இதைத்தான் படத்தில் சொல்லியுள்ளோம்.

வேறு எந்த வித தவறான காட்சிகளும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து படக்குழு சார்பிலும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் "மண் சார்ந்த கதையாகவும் மனிதம் மற்றும் அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் இராவணக் கோட்டம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். KRG Group Of Companies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும்.

எந்த வகையிலும் இனம், மொழி, சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கப்படவில்லை. பத்திரிகையாளர் முன் வெளியீட்டு காட்சி மற்றும் பிரத்யேக காட்சியில் படம் பார்த்த பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாரட்டியுள்ளனர்.

படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்ப வேண்டாம். படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஃபர்ஹானா திரைப்படம் மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.