ETV Bharat / state

வாடகை பாக்கி: மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்குச் சீல் - மயிலாப்பூர் கிளப் வாடகை பாக்கி

சென்னை மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் நியாய வாடகை நிலுவைத் தொகை செலுத்தாததால் அதனைப் பூட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் நிர்வாகத்தினர் சீல்வைத்துள்ளனர்.

மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு சீல்
மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு சீல்
author img

By

Published : Feb 21, 2022, 4:27 PM IST

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான, மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலை, சர்வே எண்:3333 இல் உள்ள 42 கிரவுண்ட் 1,566 சதுரஅடி பரப்பளவுள்ள மனை மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டு 27.8.2000 அன்று குத்தகை காலம் முடிவடைந்தது.

இந்த இடத்தினை மீண்டும் மேற்கண்ட நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மயிலாப்பூர் கிளப் நிறுவனம் கோரியதையடுத்து, 2007ஆம் ஆண்டில் 42 கிரவுண்ட் 1,566 சதுர அடியில் ஒரு பகுதியான 18 கிரவுண்ட் 2,364 சதுர அடி நிலத்தை கோயில் வசம் ஒப்படைத்த நாள் முதல் மூன்று ஆண்டு காலம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வாடகை உயர்வு

அதன்படி மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் 18 கிரவுண்ட் 2,364 சதுர அடி பரப்பளவுக்குப் பதிலாக 18.5.2007 அன்று 18 கிரவுண்ட் 1,581 சதுர அடி நிலத்தை ஒப்படைத்தனர். தற்போது மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் வசம் 23 கிரவுண்ட் 2,385 சதுரஅடி பரப்பளவுள்ள மனை அனுபவத்தில் உள்ளது. மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 விழுக்காடு வாடகை உயர்வு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது.

மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு சீல்

மேலும் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளின்படி இந்தக் கோயிலுக்குச் சொந்தமான கட்டடங்கள், மனைகளின் வாடகைதாரர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியாய வாடகை நிர்ணயம்செய்யப்பட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சட்டப்பிரிவு நியாய வாடகை நிர்ணயம்செய்து நான்கு வாரங்களுக்குள் நிலுவையின்றி வசூலித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகை

மேற்படி அரசாணை, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் 1.7.2016 அன்று வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. 27. 2.2018 அன்று அறிவிப்பில் மாதம் ஒன்றுக்கு நியாய வாடகை ரூ.11,51,700 பணம் என நிர்ணயம்செய்யப்பட்ட விவரம், நிலுவைகளைச் செலுத்திடக் கோரி அறிவிப்பு சார்வு செய்யப்பட்டது.

மேலும் 1.7.2019 அன்று முதல் நிர்ணயம் செய்யப்பட்ட நியாய வாடகை குறித்து விவரம் மற்றும் நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்பு சார்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்படி நிறுவனம் புதிதாக நிர்ணயம் செய்த வாடகையை செலுத்தாததால் கடந்த 22.12.2021 மற்றும் 6.1.2022 அன்று மீண்டும் அறிவிப்பு அனுப்பப்பட்டது.

கிளப் நிறுவனத்திற்குச் சீல்

அதனை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 5.2.2022 அன்று மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் நியாய வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதியாக ஒரு கோடிக்கான காசோலையை கோயிலின் தக்கார் மற்றும் இணை ஆணையர் செயல் அலுவலரிடம் வழங்கினர்.

எனினும் 31.1.2022 அன்று வரை வாடகை நிலுவையாக ரூ.4,07,86,731 பணம் உள்ளது. எனவே அதிக வாடகை நிலுவை வைத்துள்ளதால் இன்று (பிப்.21) அந்த இடத்தில் உள்ள கட்டடம் மற்றும் அலுவலகம் ஆகியவை பூட்டி சீலிடப்பட்டது.

இதையும் படிங்க: திமுக நிர்வாகியைத் தாக்கியதாக ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.