ETV Bharat / state

காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான யானைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Sep 19, 2019, 12:54 PM IST

சென்னை: தனியார் வசமுள்ள காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான மூன்று யானைகளை மீட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் நான்கு வாரங்களுக்குள் ஒப்படைக்க வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

relocate-3-elephant-from-private-custody-hc-order

விலங்கின ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், காஞ்சிபுரம் காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. அந்த யானைகளின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி 2016ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளையும் தனியார் தொண்டு நிறுவனம் எடுத்துச் சென்றது.

தற்போது, விழுப்புரம் மாவட்டம் குறும்பாரம் கிராமத்தில் கடுமையான புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் வனத்துறை அனுமதி இல்லாமல் யானைகள் முகாமை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும், யானைகள் பராமரிப்பு என்று சொல்லி வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் பல லட்சம் ரூபாய் நன்கொடையாகவும் தனியார் நிறுவனம் பெற்று வருகிறது. அதனால், சட்டவிரோதமாக செயல்படும் யானைகள் முகாமை மூடி, தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 3 யானைகளையும் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு பராமரிக்க முடியாத 3 யானைகளையும் மீட்டு 4 வாரங்களில் திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், யானைகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள மருத்துவசதிகள் குறித்து வனத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க...

தமிழர்களின் கட்டடக்கலைக்கு பயன்படுத்தப்பட்ட கருங்கல் சக்கரம்!

Intro:Body:தனியார் வசமுள்ள காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை மீட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் 4 வாரங்களில் சேர்க்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விலங்கின ஆர்வலர் முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், காஞ்சிபுரம் காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமாக சந்தியா, ஜெயந்தி, இந்துமதி என்ற யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், யானைகள் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி 2016 ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளையும் தனியார் தொண்டு நிறுவனம் எடுத்து சென்றது.

தற்போது, விழுப்புரம் மாவட்டம் குறும்பாரம் கிராமத்தில் கடுமையான புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் வனத்துறை அனுமதி இல்லாமல் யானைகள் முகாமை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.

மேலும், யானைகள் பராமரிப்புக்காக என்று வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் பல லட்சம் ரூபாய் நன்கொடையாகவும் தனியார் நிறுவனம் பணம் பெற்று வருகிறது.

அதனால், சட்டவிரோதமாக செயல்படும் யானைகள் முகாமை மூடி, தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 3 யானைகளையும் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு அவர் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு பராமரிக்க முடியாத 3 யானைகளையும் மீட்டு 4 வாரங்களில் திருச்சி எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்.

யானைகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள மருத்துவசதிகள் குறித்து வனத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.