ETV Bharat / state

'தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணப் பொருள்களை விரைவில் வழங்க வேண்டும்' - கே. பாலகிருஷ்ணன் - Tamil Nadu Secretary of State Balakrishnan

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கவிருக்கும் நிவாரண நிதியை ஓரிரு நாள்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.

kk
kk
author img

By

Published : Mar 31, 2020, 6:40 PM IST

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், "ஊரடங்கு உத்தரவு ஒரு வார காலம் அமலில் உள்ள சூழ்நிலையில் ஏழை, எளிய மக்கள் வேலை, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இதற்குள்ளாகவே அரசு நிவாரணத் தொகை, உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கி முடித்திருந்தால் மக்களுக்கு ஓரளவு பயன் அளித்திருக்கும்.

எனவே அரசு ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குள் இவற்றை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதற்கான உரிய ஏற்பாட்டினை செய்திட வேண்டும். வீடு வீடாகச் சென்று வழங்குவது மிகவும் நல்லது. ஒருவேளை அது சாத்தியம் இல்லாது இருப்பின் தற்போது நியாய விலைக் கடை ஊழியர்களோடு அரசு ஊழியர்கள், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஆகிய அனைவரையும் பயன்படுத்தி குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் வழங்கி முடித்துவிட கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசு அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமாக வழங்குவது போல், நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும், வருவாய்த் துறை மற்றும் ஊரக உள்ளாட்சிச் துறை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க:கடன் தொகை செலுத்த மூன்று மாதம் அவகாசம் - முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.