ETV Bharat / state

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் தற்கொலை - கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்! - திருமுல்லைவாயல்

ஆவடியில் ரோந்து வாகன விபத்து விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை கண்டித்து காவலரின் உறவினர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Relatives
சஸ்பெண்ட்
author img

By

Published : May 12, 2023, 5:40 PM IST

காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகே அண்ணனூர் தேவி நகரைச் சேர்ந்தவர், வள்ளிநாயகம்(32). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஆண்டு முதல் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 5ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காவல்துறை வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. வாகனத்தில் இருந்த வள்ளிநாயகம், உதவி ஆய்வாளர் முருகேசன் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதனிடையே கடந்த 8ஆம் தேதி வள்ளிநாயகம் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வாகனத்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும், விபத்திற்குள்ளான வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்பதால், அந்த வாகனத்தை பழுது பார்க்க 7 லட்சம் ரூபாய் பணத்தை வள்ளிநாயகம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காவலர் வள்ளிநாயகம் நேற்று(மே.11) வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், காவலர் வள்ளிநாயகத்தை சஸ்பெண்ட் செய்த காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து, அவரது உறவினர்கள் இன்று ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது, காவலர் வள்ளிநாயகத்தின் மீது எந்த தவறும் இல்லை என்றும், சஸ்பெண்ட் செய்யாமல் இருந்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தை வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை போலீசார் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சென்னையில் காவலர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.