அண்மையில் அதிமுக தலைமைக் கழகம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள் சிலரை நியமித்தது. அதில் சென்னை மண்டலம் அஸ்பயர் மு. சுவாமிநாதன், வேலூர் மண்டலம் ஆ. கோவை சத்யன், கோவை மண்டலம் சிங்கை. ராமச்சந்திரன், மதுரை மண்டலம் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் அடங்குவர்.
அவர்கள் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதற்கு முன்னதாக அவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அதிமுக ஐடி விங் மண்டல் செயலாளர்கள்