சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் எஸ்பிஐ வங்கியின் 30-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கோடிக்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்தனர். இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த 14 பேர் இருப்பதாகக் கூறப்பட்டது.
தனிப்படையினர் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று சில குற்றவாளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
14 மாநிலங்களில் கொள்ளை நடந்துள்ளதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல் துறையினர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர். இதனை விரைவில் மத்திய அரசின் உள் துறைக்கு, தமிழ்நாடு அரசு அனுப்பிவைக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு - இளைஞரின் காதை கடித்து துப்பிய கும்பல்