ETV Bharat / state

இபிஎஸ் குறித்து அவதூறு பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம் - latest tamil news

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் வேண்டுமென்றே அவதூறு பரப்ப சமூக வலைதளங்களில் கருத்துக்களை அறப்போர் இயக்கம் பதிவு செய்துள்ளது என உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

இபிஎஸ் குறித்து அவதூறு பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை ஏன்

author img

By

Published : Dec 3, 2022, 6:28 AM IST

சென்னை: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவதூறு பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில்,”கடந்த 2020ல் புகார் அளித்த போதும் அதை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்காத நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பதை தெரிந்தே, புத்திசாலித்தனமாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்து விட்டு கருத்து சுதந்திரம் என்ற பெயரில், எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், வெறும் யூகங்களின் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாமல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் வேண்டுமென்றே, சமூக வலைதளங்களில் கருத்துக்களை அறப்போர் இயக்கம் பதிவு செய்துள்ளது.

காவல் துறையில் புகார் அளிப்பது அவதூறாகாது என்ற போதும், அறப்போர் இயக்கம் அளித்த புகார் மீது இதுவரை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத நிலையில், அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டது நியாயமான செயலாக கருத முடியாது. இது அவதூறு பரப்பும் உள்நோக்கம் கொண்டது” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “அதிகார துஷ்பிரயோகம் செய்து வேண்டப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டெண்டர் ஒதுக்கீடு செய்தார் என்ற புகாருக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. டெண்டர் ஒதுக்கீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பங்கும் இல்லை. கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற சுதந்திரமல்ல. கருத்து சுதந்திரம் என்பது மற்ற தனி நபர்களை அவமதிக்கும் உரிமையல்ல” என்றார்.

மேலும் அரசியல்வாதிகளின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது, சம்பந்தப்பட்ட அரசியல்வாதி மீண்டும் மக்கள் நம்பிக்கையை பெற போராட வேண்டி வரும் என்பதால், ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளதாக கூறி, எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: உண்ணாவிரதம் நடத்த அனுமதிகோரி சமக மனு: பரிசீலிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.