ETV Bharat / state

நியாய விலைக்கடைகள் மீண்டும் செயல்படும் - தமிழ்நாடு அரசு

இன்று(ஜுன்.8) முதல், காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Jun 8, 2021, 7:03 AM IST

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் இன்று(ஜுன்.8) முதல் நியாய விலைக்கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் ஜுன்.7 முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மளிகைக் கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நியாய விலைக் கடைகள் வரும் 8ஆம் தேதி முதல்(இன்று) சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என்றும்; இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000, 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை வரும் 15ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்லலாம்.

அதற்கு ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை வரும் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்க வேண்டும்.

அதேசமயம் வரும் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை முற்பகல் நேரத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழக்கம்போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவல் தடுப்புப் பணி - அமைச்சர்கள் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.