ETV Bharat / state

தமிழ்நாடு, புதுச்சேரியில் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம் - 5 கடமைகள்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. வரும் முப்பது நாள்களிலும் இஸ்லாமியர்கள் தினந்தோறும் ஐந்து முறை தொழுகை செய்து எச்சில்கூட விழுங்காமல் நோன்பை கடைப்பிடிக்கின்றனர்.

ரம்ஜான் பண்டிகை
author img

By

Published : May 7, 2019, 8:44 AM IST

ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்று. நோன்பின் காலத்தில் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நல்ல விளைவுகள் ஏற்படுவதாக இஸ்லாமியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ரம்ஜான் நோன்பின் பலன்கள் குறித்து திருக்குரானின் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம் வசனத்தில், "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஷாபான் மாதம் 29ஆம் (மே 5) நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாகக் கொண்டு ரம்ஜான் பண்டிகை நோன்பு தொடங்கப்படும். முப்பது நாள்களிலும் நோன்பிருந்து இறைவனைத் தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். இந்தாண்டு ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இதையடுத்து மே 7ஆம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

இன்று தொடங்கும் ரம்ஜான் நோன்பின் 30ஆவது நாள் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். நோன்பு தொடங்கும் நாளில் இருந்து, அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நடைபெறும். ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். சஹர் என்னும் காலை உணவை அதிகாலை நான்கு மணிக்கு உண்டு, சூரியன் உதயத்துக்கு பின் நோன்பிருப்பர். நாள் முழுவதும் எச்சிலைக் கூட விழுங்காமல், மாலையில் நோன்பைத் துறப்பர். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நோன்பின் 27ஆம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், 30ஆம் நாள் முடிவில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.