ETV Bharat / state

பூஜையுடன் தொடங்கிய ‘ராமராஜன் 46’

ராமராஜன் கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.

author img

By

Published : Jun 16, 2023, 8:45 AM IST

ராமராஜன் 46
ramarajan 16

சென்னை: தமிழ் சினிமாவில் 80, 90களில் மிகப் பெரிய வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர், நடிகர் ராமராஜன். தனது அனைத்து படங்களிலும் நாயகனாக மட்டுமே நடித்த பெருமைக்கு சொந்தக்காரர். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்டோர் கோலோச்சிய காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர்.

கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘சாமானியன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த ப்படம் தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார், ராமராஜன்.

அந்த வகையில் 7 ஆத்ரி ஃபிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இது அவரது 46வது படமாக உருவாகிறது. ராமராஜன் நடித்து வரும் சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் வி என்பவர், இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதுடன் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

சாமானியன் படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் வி.மதியழகன், இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் முதன் முதலாக நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார். சாமானியன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார். ரிச்சர்ட் பிராங்க்ளின் என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் இந்த படத்தில் படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குநர் கார்த்திக் குமார் கூறும்போது, “ராமராஜன் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த சாமானியன் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அடிப்படையில் நான் ஒரு கதாசிரியர் மட்டும் தான். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது இல்லை. பல படங்களில் கதை ஆலோசகராக பணியாற்றி உள்ளேன். அதேநேரம் கதாசிரியராக இருந்து இயக்குநராக மாறுவது ஒன்றும் சுமையான விஷயமும் அல்ல. கதையுடனே பயணித்து இருப்பதால், படத்தை இயக்குவது இன்னும் எளிதாகவே இருக்கும்.

சாமானியன் படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018இல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்தப் படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார். ஆனால், இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்டதுதான் இந்த கதையும்.

ஆனால், சாமானியன் படத்திற்கும், இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறாக இருக்கும். இந்த படத்தில் நடிகர் ராமராஜன் இதுநாள் வரை பார்த்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு ஒரு சாதாரண வழக்கறிஞராக நடிக்கிறார்.

அவருக்குள் தற்போது இருக்கும் எண்ணங்களும், ஆர்வமும் கடந்த ஒரு வருடமாக அவருடன் பயணிப்பதால் எனக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் இதுவரை பார்த்திராத ஒரு ராமராஜன் படமாக மிகப் பிரமாண்டமாக மாஸான படமாக இது இருக்கும். இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதுடன் நானே டைரக்ஷனையும் கவனிப்பதால், வசனங்களை எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுக்கலாம் என பேசி வருகிறோம்.

அது உறுதியாகி, முழுமையான வசனங்கள் தயாரானதும், ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்கு முன்னதாக இந்த படத்தை பூஜையுடன் தொடங்கி டீசருக்கான பணிகளை செய்து வருகிறோம்.

இந்த டீசரை முடித்துவிட்டு இளையராஜாவை சந்தித்து போட்டு காட்ட இருக்கிறோம். அதன் பிறகு இந்த படத்தில் டைட்டில், பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும்” என கூறினார்.

இதையும் படிங்க: Mamannan: 'மாமன்னன்' திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.