ETV Bharat / state

தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!

தனித்தமிழ் பயன்பாட்டை வலியுறுத்தி பட்டாளி மக்கள் கட்சி நடத்திய பல்வேறு பணிகளுக்கு துணை நின்றவர் தமிழறிஞர் இளங்குமரனார் என அவர் குறித்த நினைவுகளை இரங்கல் குறிப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ramadoss condolence ilangkumaran
தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!
author img

By

Published : Jul 26, 2021, 2:32 PM IST

சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழறிஞரும், தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவருமான தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தமிழாசிரியராக பணியைத் தொடங்கிய இரா. இளங்குமரனார், 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம் (14 தொகுதிகள்) தேவநேயப்பாவாணரின் ஆய்வுப்பிழிவான 'தேவ நேயம்' (10 தொகுதிகள்) முதலான அரிய நூல்களை படைத்தவர் இவர். தனித் தமிழ் பயன்பாட்டை வலியுறுத்தி பல இயக்கங்களை நடத்தியவர்; அதற்காக பெரும் பங்களித்தவர்.

எனக்கு மிகவும் நெருக்கமான தமிழறிஞர்களில் புலவர் இரா. இளங்குமரனாரும் ஒருவர். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். தனித்தமிழ் பயன்பாட்டை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய பல்வேறு பணிகளுக்கு துணை நின்றவர்.

தமிழறிஞர் இளங்குமரனாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு தமிழுக்கு பேரிழப்பு- திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.