ETV Bharat / state

'தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க' - ராமதாஸ் - take necessary action without affecting Indian Fishermen

தமிழ்நாடு மீனவர்கள் வங்கக் கடலில் நிம்மதியாக மீன்பிடிப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Ramadoss Asked External Affairs Minister Jaishankar to take  necessary  action without affecting Indian Fishermen

author img

By

Published : Oct 18, 2020, 5:55 PM IST

சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று(அக்.17) கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கே ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கரை திரும்ப உத்தரவிட்டுள்ளனர். இல்லையெனில் சுட்டுவிடுவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த ராமேஸ்வர மீனவர்கள் இன்று(அக்.18) காலையில் கரை திரும்பியுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலால் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல், சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாடு மீனவர்கள் வங்கக் கடலில் நிம்மதியாக மீன் பிடிப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.