ETV Bharat / state

மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் களமிறங்குகிறார் எம்.எம். அப்துல்லா

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

abdulla
abdulla
author img

By

Published : Aug 22, 2021, 12:24 PM IST

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்ததால் மாநிலங்களவையில் ஒரு இடம் காலி ஆனது. இதனையடுத்து அந்த இடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை நான்கு மணிவரை தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவும் வெளியாகும்.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் திமுக கட்சி சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணை செயலாளர் எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி. செப்டம்பர் ஒன்றாம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் மூன்றாம் தேதி ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.