தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுக சார்பில் தலா மூன்று உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடியும்.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான், மேட்டூர் நகர செயலாளர் எஸ். சந்திரசேகரன் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை ஒபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்தது. அதேபோல், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.