ETV Bharat / state

ரஜினிகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி

சென்னை: பெரியார் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குபதிவு செய்யக்கோரி திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினி
ரஜினி
author img

By

Published : Mar 10, 2020, 7:27 PM IST

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த துகளக் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ’சேலத்தில் 1971ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டதாக’ கூறினார்.

இவரது பேச்சுக்கு பல தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. நடிகர் ரஜினிகாந்த் இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக அவர் மீது காவல் துறையில் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார்.

இதனையடுத்து தனது புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், காவல் துறை கமிஷனரிடம் கடந்த ஜனவரி 20ஆம் தேதி புகார் செய்யப்பட்டது.

அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை எழும்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 4ஆம் தேதி உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரோஸ்லின் துரை முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஆறுமுகம் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்து அவர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

அதில், இந்த வழக்கில் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யாத நிலையில், மனுவில் ரஜினிகாந்த் குற்றவாளி என குறிப்பிட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் விளம்பரத்திற்காகவும், நீதிமன்ற நேரத்தை வீண்டிப்பதற்காகவும் தொடரப்பட்டிருக்கிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், உமாபதி தரப்பில், ரஜினிகாந்த் பேச்சு குறித்து ஏற்கனவே போதிய ஆதாரங்களை சமர்பித்துள்ளதாகவும், வழக்குக்கு தொடர்பில்லாத நபர் இந்த வழக்கில் இணைவதை அனுமதிக்கக்கூடாது எனவும், தங்கள் மனுவை ஏற்று ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதம் வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போதிய ஆதாரங்களுடன் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புதிய மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.