ETV Bharat / state

சசிகலா உடல்நிலை குறித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த் - டிடிவி தினகரன் தகவல் - Rajinikanth inquires about Sasikala's health

சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தன்னிடம் விசாரித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சசிகலா
சசிகலா
author img

By

Published : Feb 9, 2021, 11:30 AM IST

சென்னை தி.நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், "24 மணி நேரம் பயணம் செய்ததில் சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை அவர் நன்றாக இருக்கிறார். மக்கள் மனதில் சசிகலா எந்த தவறும் செய்யவில்லை என்பதுதான் இருக்கிறது, அதற்கு சாட்சிதான் இந்த இருபத்தி நான்கு மணி நேர வரவேற்பு.

ஜனநாயக ஆயுதம்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திமுக ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்க முக்கிய காரணம் அதிமுகவை மீட்டெடுப்பதற்கும், தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சியை நிலைப்பதற்கும் தான்" என்றார்.

ரஜினிகாந்த் நலம் விசாரிப்பு

தொடர்ந்து கூறிய அவர், "அதிமுகவிலிருந்து என்னிடம் நிறைய பேர் பேசினார்கள் அதை எல்லாம் வெளிப்படையாக கூற முடியாது. அமமுக தொண்டர்களுடன் அதிமுக தொண்டர்களும் சசிகலாவை வரவேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் சசிகலா உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தார்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.