சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர்12) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ரசிகர்கள் பலரும் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு குவிந்தவண்ணம் உள்ளனர். ஆனால் ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கின்றனர்.
ரஜினியின் ரசிகர்கள் நேற்று (டிசம்பர் 11) முதலே கோயில்களில் சிறப்பு பூஜையும் யாகம் நடத்தியும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ரஜினி மக்கள் மன்றத்தினரும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.
இதனையடுத்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினி அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- — Rajinikanth (@rajinikanth) December 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Rajinikanth (@rajinikanth) December 12, 2020
">— Rajinikanth (@rajinikanth) December 12, 2020
அதில், "இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் சக திரைக்கலைஞர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும், உற்சாகத்துடன் என் பிறந்தநாளைக் கொண்டாடிவரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்" என பதிவிட்டுள்ளார்.
-
Respected dear @narendramodi Ji , thank you very much for your kind wishes 🙏🏻 https://t.co/TFw2MHV4bK
— Rajinikanth (@rajinikanth) December 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Respected dear @narendramodi Ji , thank you very much for your kind wishes 🙏🏻 https://t.co/TFw2MHV4bK
— Rajinikanth (@rajinikanth) December 12, 2020Respected dear @narendramodi Ji , thank you very much for your kind wishes 🙏🏻 https://t.co/TFw2MHV4bK
— Rajinikanth (@rajinikanth) December 12, 2020
அதேபோல் தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஜினி, மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.