ETV Bharat / state

டெல்லியிலிருந்து விருதுடன் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் - rajini returns to chennai

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (அக்.27) சென்னை வந்தடைந்தார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
author img

By

Published : Oct 27, 2021, 7:08 AM IST

நாட்டின் 67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை (அக்.25) நடைபெற்றது. விழாவில், இந்தியத் திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்த்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினிகாந்திற்கு வழங்கினார். இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

டெல்லியிலிருந்து விருதுடன் சென்னை திரும்பிய ரஜினி

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று (அக்.27) டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் கடும் தள்ளு முள்ளுக்கு இடையே அவர் காரில் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் பண்பாளர் ரஜினி - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.