சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவருமான ராஜ கண்ணப்பன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘உள்ளாட்சி தேர்தலைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் எதையும் மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. இதற்காகதான் திமுக வழக்கு தொடர்ந்துள்ளதே தவிர, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தயக்கம் இல்லை.
அதிமுக தனது சுய லாபத்திற்காக உள்ளாட்சித் தேர்தலை நடத்த பார்க்கின்றது. தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி, முதலமைச்சர் பழனிசாமி என இரண்டு பழனிசாமிகளும் இணைந்து தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்குகின்றனர்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம். திமுகவில் எங்கள் கட்சியை இணைப்பது குறித்து தேர்தல் முடிவுக்கு பின்பு ஆலோசிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை: ராஜ கண்ணப்பன்!