சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், 1033.15 கிலோ மீட்டருக்கு 4,070 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு பிரிவுகளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்ற நோக்கில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதில் முதல் பிரிவின்கீழ் 97 விழுக்காடு பணிகளும், 2ஆவது பிரிவின்கீழ் 94 விழுக்காடுப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. வெள்ளத்தடுப்பு பணிகளைப்பொறுத்தவரை மொத்தமுள்ள 76.521 கிலோ மீட்டர் தொலைவில் 62 கிலோ மீட்டர் அளவுக்கு முடிவுற்றுள்ளது.
மொத்தமாக சுமார் 82 விழுக்காடுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க நேற்று(அக்.20) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் கனமழை வரும் வரை வடிகால் பணிகளைத் தொடர ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.