ETV Bharat / state

பாடகர் மனோ மனைவி தாக்கப்பட்ட விவகாரம்; சிறுவர் உட்பட இருவர் கைது! - singer mano wife attacked - SINGER MANO WIFE ATTACKED

சென்னை வளசரவாக்கத்தில் பாடகர் மனோவின் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடகர் மனோவின் குடும்பம் (கோப்புப்படம்)
பாடகர் மனோவின் குடும்பம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 6:10 PM IST

சென்னை: வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு, ராதா அவென்யூ பகுதியில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் வீடு அமைந்துள்ளது. கடந்த மாதம் இவரது வீட்டின் அருகே நடந்து சென்ற நபர்களுக்கும், மனோவின் மகன்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், காயம் அடைந்த நபர்கள் அளித்த புகாரின் பேரில், பாடகர் மனோவின் வீட்டில் பணிபுரிந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், அவர்கள் முன் ஜாமீன் பெற்றனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் மனோவின் மனைவி ஜமீலா (60) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தன்னை தாக்கி விட்டு காரில் இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் பணம், 12 பவுன் நகைகளை எடுத்து சென்றதாக புகார் அளித்தார்.

இதையும் படிங்க: காதல் கணவன் ஏமாற்றியதால் மனைவி தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

இந்த புகாரின் பேரில், வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் மதுரவாயல் அடுத்த ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் (20), 16 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, காரில் இருந்து நகை, பணம் எடுத்து செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து மனோவின் மனைவியை தாக்கிய சம்பவத்தில், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.