பெங்களூரு: "விநாயக் சாவர்க்கரின் அடிப்படைவாத சித்தாந்தம் இந்திய கலாசாரத்தில் இருந்து வேறுபட்டது. அவர் தேசியவாதியாக இருந்தாலும் நாட்டில் மகாத்மா காந்தியின் வாதமே வெற்றி பெற வேண்டும்" என கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் திரேந்திர கே. ஜா எழுதிய "காந்தியின் கொலையாளி: நாதுராம் கோட்சே மற்றும் இந்தியா பற்றிய அவரது கருத்தின் உருவாக்கம்" என்ற புத்தகத்தின் கன்னட பதிப்பு வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பேசியதாவது:
"ஒரு விவாதத்துக்காக சாவர்க்கர் வெற்றி பெறுகிறார் என கூறலாம் என்றால், அது சரியல்ல. அவர் அசைவம் உண்பவர். அவர் பசுக்கொலைக்கு எதிரானவர் அல்ல; அவர் ஒரு சித்பவன் பிராமணர். சாவர்க்கர் நவீனத்துவவாதியாக இருந்தாலும் அவருடைய அடிப்படை சிந்தனை வேறுவிதமாக இருந்தது. அவர் மாட்டிறைச்சி சாப்பிடுவார் என்றும், மாட்டிறைச்சி உண்பதாக வெளிப்படையாகப் பிரசாரம் செய்கிறார் என்றும், எனவே அவரது சிந்தனை வேறு என்றும் சிலர் சொன்னார்கள்.
ஆனால் காந்திஜி இந்து மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதில் பழமைவாதியாக இருந்தாலும் அவர் ஜனநாயகவாதியாக இருந்ததால் காந்திஜியின் நடவடிக்கைகள் வேறுபட்டது. முகம்மது அலி ஜின்னா ஒரு தீவிர இஸ்லாமிய விசுவாசி. ஆனால் அவர் பன்றி இறைச்சியை உண்பவர்.
இதையும் படிங்க: பீகார் முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை!
மக்கள் சொல்வது போல், புதுமைக் கோட்பாட்டிற்குப் பிறகு, ஜின்னா ஒரு அடிப்படைவாதி அல்ல; அவர் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்க விரும்பினார். மேலும், தனி நாடு வேண்டும் என விரும்பினார். அதனால்தான் அவர் மதச்சார்பின்மையை பின்பற்றினார்; சாவர்க்கர் அப்படி இல்லை.
ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா மற்றும் பிற வலதுசாரி அமைப்புகள் அடிப்படைவாதத்தை கட்டமைக்க முயல்கின்றன. இதற்கு நாம் அவர்களின் அடிப்படைவாதத்தை குறைத்து பதில் சொல்ல வேண்டும். அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும், மக்களுக்கு புரிய வைப்பதும் முக்கியம்" என்றார்.
மேலும், இந்த புத்தகம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள பதிவில், "மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் மனநிலை மற்றும் அந்த துயரமான தருணத்தைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் பற்றிய நன்கு ஆவணப்படுத்தப்பட்ட புத்தகமாக இது உள்ளது.
கோட்சேவின் சிந்தனையில் சாவர்க்கர் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதையும் இது ஆராய்கிறது. காந்திஜியின் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை, சாவர்க்கர் சித்தாந்தத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கிற்கும், இன்று அது பிரதிநிதித்துவப்படுத்தும் அடிப்படைவாதத்துக்கும் ஒரு சக்திவாய்ந்த எதிர்ப்பாக இப்புத்தகம் உள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் தினேஷ் குண்டு ராவின் கருத்துகளுக்கு பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "இதுபோன்ற நபர்களின் (தினேஷ் குண்டுராவ்) இத்தகைய அறிவு அவர்கள் மன சமநிலையை இழந்துவிட்டார்கள் என்பதை நிரூபிக்கிறது.
இப்படி ஞானத்தை ஊட்டிக்கொண்டே இருந்தால் சமூகம் அவர்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாது. நாட்டின் சிறந்த ஆளுமைகளைப் பற்றிய அறிவைப் பெற அவர் ஒரு மனநல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்