ETV Bharat / state

ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை!

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain-update-tamilnadu
rain-update-tamilnadu
author img

By

Published : Jun 9, 2021, 1:53 PM IST

வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜுன் 11,12 : கடலோர மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை :

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

சிதம்பரம் (கடலூர்) 11, பரமக்குடி (ராமநாதபுரம்) 10, நாகுடி (புதுக்கோட்டை) 6, கொள்ளிடம் (மயிலாடுதுறை) 5, உதகமண்டலம் (நீலகிரி), சித்தார் (கன்னியாகுமரி) தலா 4, சாத்தூர் (விருதுநகர்), காரைக்குடி (சிவகங்கை) தலா 3, கோவில்பட்டி (தூத்துக்குடி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), சங்கரன்கோயில் (தென்காசி) தலா 2, செட்டிகுளம் (பெரம்பலூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பேராவூரணி (தஞ்சாவூர்) குடவாசல் (திருவாரூர்), அரியலூர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), தேக்கடி (தேனி) 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வடக்கு வங்க கடல் பகுதியில் வரும் 11 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதன் காரணமாக,

ஜுன் 09: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜுன் 09 முதல் ஜுன் 13 வரை : தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜுன் 10 முதல் ஜுன் 13 வரை: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜுன் 10 முதல் ஜுன் 13 வரை: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜுன் 11 முதல் ஜுன் 13 வரை: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜுன் 11 முதல் ஜுன் 13 வரை: ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

ஜுன் 11 முதல் ஜுன் 13 வரை: கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜுன் 09 முதல் ஜுன் 13 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: மேட்டூர் அணை திறப்பு: நடவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.