ETV Bharat / state

சென்னை ஐ.சி.எப் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை - chennai district news

சென்னை: ஐ.சி.எப்பில் நேற்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் காஜா முகைதீன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை
ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை
author img

By

Published : Sep 28, 2020, 7:11 AM IST

சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் உதிரிபாகம் தயாரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. நேற்று (செப்.27) இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்த நிலையில் தீ விபத்து நடந்தபோது பணியில் இருந்த காஜாமைதீன் என்ற பாதுகாப்பு படை வீரர் இன்று (செப்.28) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அவ்வழியாக சென்ற லாரி டிரைவர் சரவணன் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

பிறகு ஐசிஎப் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் நேரில் சென்று காஜாமைதீன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். விசாரணையில் தீ விபத்து சம்பந்தமாக ரயில்வே உயர் அலுவலர்கள் தன்னிடம் விசாரணை செய்யக்கூடும் என்ற மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடோன் தீ விபத்து, ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை ஆகிய சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அரிவாள் வெட்டு வழக்கில் சிக்கிய ஆள் கடத்தல் கும்பல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.