கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவருவதால் சென்னையில் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மண்டலத்தில் திறக்கப்படவிருந்த 19 ரயில் முன்பதிவு மையங்கள் ஜூன் 30ஆம் தேதி வரை மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு என்பதால் முன்பதிவு மையங்கள் மூடப்படுவதாகக் கூறி்ய தென்னக ரயில்வே, ஏற்கனவே பதிவு செய்திருந்த நபர்களின் பணம் ஜூன் 19ஆம் தேதிக்கு முன் அல்லது ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்படும் என்று கூறியுள்ளது.
மேலும் பார்சல் ஏற்றிச்செல்லும் கார்கோ எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஜூன் 15ஆம் தேதி வரை மட்டுமே இயங்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அது ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கோ எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழுபூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கும், செவ்வாய் புதன், சனி ஆகிய கிழமைகளில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் செயல்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு - எவையெவை இயங்கும்?