ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி, ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
பின்னர் ரயில்வே காவல் ஆய்வாளர் தாமஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வருகிறோம். ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனை மீறி ஆர்வத்தின் பேரில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சட்டத்தை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவருக்கு ரயில்வே சட்டத்தின்படி 3 ஆண்டு சிறை தண்டனையும் , ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுழற்சி முறையில் 260 ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மேலும் , புதிதாக வழங்கப்பட்டுள்ள 5 மின்சார ரோந்து வாகனம் மூலம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு எதிரான வன்முறை: உத்தரப் பிரதேசம் முதலிடம்!