ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரானார் சண்முகசந்தரம் - new advocate general of Tamil Nadu

சண்முகசந்தரம்
சண்முகசந்தரம்
author img

By

Published : May 9, 2021, 3:52 PM IST

Updated : May 9, 2021, 5:11 PM IST

15:49 May 09

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசந்தரத்தை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Shanmugasundaram
தலைமை வழக்கறிஞரானார் சண்முகசந்தரம்

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் இருந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் தற்போதைய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் சென்னை வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சண்முகசுந்தரம், சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.  

சட்டத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். 1989 முதல் 1991வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996 முதல் 2001ஆம் ஆண்டுவரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்தவர். 2000ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். பின்னர், 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2015 - 2017 காலகட்டத்தில் மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவராகவும் இருந்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக சொத்து குவிப்பு, ஊழல், குற்ற வழக்குகள் ஆகியவற்றை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Last Updated : May 9, 2021, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.