சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் பாரத மக்கள் கட்சி சார்பாக சையத் அகமத் ஷரீப் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு தனது ஆதரவளர்களுடன் பாடையில் வந்த ஷரீப்பை, தண்டையார் பேட்டை மாநகராட்சி அலுவலகத்திற்கு 100 மீட்டர் முன்பே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர், வேட்பாளர் மட்டும் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!