ETV Bharat / state

சட்டப்பேரவையில் காரசாரமான கேள்விகள் மற்றும் அமைச்சர்களின் பதில்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 10:50 PM IST

TN Legislative Assembly: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, அதிமுக ஆட்சியில் அமைத்த 130 மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) வினா விடை நேரத்தில் எழுப்பபட்ட கேள்விகளையும் அதற்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் அளித்த பதிலுரைகள் என காரசாரமாக நடந்தவற்றை இங்கு காணலாம்.

ராமேஸ்வரத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுமா?: ராமேஸ்வத்தில் அரசு பணியாளர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட வேண்டும் என ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதலளித்த வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, அரசுப் பணியாளர்கள் எத்தனை பேர் அங்கு இருக்கின்றனர்? அவர்களுடைய தேவை என்ன? என கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும், ஏனென்றால் வீட்டு வசதி வாரியம் முலம் அரசுப் பணியாளர்களுக்காக பல இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடிகள் விற்கப்படாமல் இருப்பதாகவும் பதிலளித்தார். மேலும், நீண்டநாள் விற்கப்படாமல் இருக்கும் அவற்றை இடித்து புதிய கட்டிடம் கட்டும் நிலை ஏற்பட்டதாகவும் பேசினார்.

தோழி விடுதிகள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி: மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி அமைக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் அமைக்கும் பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக ஏற்கனவே அடையாறு, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். அதேபோல மதுராந்தகம் தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் தோழி விடுதிகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிலளித்தார்.

அடிப்படை வசதிகளற்ற 130 மருத்துவமனைகள்?: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மருத்துவமனை குறித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலுக்கு அதிமுகவினர் அமளி ஈடுபட்டனர். கேள்வி நேரத்தில் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டக்கூடாது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாதத்தை முன்வைத்தார். மேலும் அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் வெறுமனவே பெயர் பலகை மட்டுமே, மாற்றப்பட்டதாக கூறுவது தவறு எனவும் எந்த மருத்துவமனையில் அவ்வாறு செய்யப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினால் ஆதாரங்களுடன் விவாதம் நடத்த தயார் என விஜயபாஸ்கர் வாதாடினார்.

மருத்துவப் பணி இடங்களையும் உருவாக்காமல், 130 மருத்துவமனைகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தரம் உயர்த்தியுள்ளதாகவும்; ஆனால், அந்த 130 மருத்துவமனைகளின் பட்டியலை தருவதாகவும் அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை நியமித்துள்ளார்களா? என அவரே ஆய்வு செய்து விவாதிக்கலாம் எனப் பதிலளித்தார்.

வரும் டிசம்பருக்குள் திருப்பணிகள் ஆரம்பம்: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், புவனகிரியில் உள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயில் மற்றும் வளையமாதேவி திருக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கேள்வி எழுப்பினார்.

புவனகிரியில் உள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு கடந்த 1960-ல் குடமுழுக்கு நடந்ததாகவும், ஆகம விதிப்படி, 63 ஆண்டுகளுக்குப் பிறகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கான திருப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதிலளித்தார்.

அதேபோன்று, வளையமாதேவி திருக்கோயிலை புனரமைக்க 31 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பணிகளும் விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி: யார் யாரெல்லம் முன்பதிவு செய்யலாம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.