கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவரை காவல் துறையினர் கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இவர்களுக்கு பெங்களூருவில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார், இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்புள்ளதா என்கிற கோணத்தில் தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறையினர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த உசேன் செரீஃப் என்பவர் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பயங்கரவாதிகள் சொல்லியதாகக் கூறி, செரீஃபை கியூ பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
வில்சன் கொலைசெய்யப்படுவதற்கு முன்னதாக, ஏற்கனவே பயங்கரவாத செயல்களுக்கு துணைபோவதாக மூன்று பேரை காவல் துறையினர் பெங்களூருவில் கைதுசெய்திருந்தனர். தற்போது இந்த மூன்று பேருக்கும் வில்சன் கொலையாளிகளான பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் கொலை: இருவரை கைது செய்தது கேரள காவல்துறை!