ETV Bharat / state

’எம் - சாண்ட்’ குவாரிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியது பொதுப்பணித்துறை - M Sand

சென்னை: மதிப்பீடு செய்யப்பட்ட ’எம் - சாண்ட்’ குவாரிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

msand
msand
author img

By

Published : Jan 13, 2020, 4:57 PM IST

மணலுக்கு மாற்றாக ’எம் - சாண்ட்’ பயன்படுத்த தமிழ்நாடு அரசு ஊக்குவித்துவருகிறது. விபத்துகளை தவிர்ப்பதற்காக ஒரிஜினல் எம் சாண்ட் குவாரிகளுக்கு மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இதுவரை 216 குவாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு, மதிப்பீடு செய்யப்பட்ட குவாரிகளின் பட்டியலை பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது.

அதில், ”முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எம் - சாண்டு குவாரிகளுக்கு கடிதம் எழுதி மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த குவாரிகளில் பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து ’எம் - சாண்டை’ ஒன்பது துறை நிபுணர்கள் அடங்கிய குழு பரிசோதித்த பின்னரே மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

msand
எம் சாண்ட் மணல்

எம் - சாண்ட் தொடர்பாக புகார் எழுந்தால் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். இதில் முறைகேடு இருந்தால் சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குவாரிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்ந்த பிற அலுவலகங்களிலும் இதை பார்வைக்கு வைக்கவேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவதோடு ஒரிஜினல் ’எம் - சாண்ட்’ பெற வழிவகை செய்யும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செயற்கை மணலுக்காக விவசாய நிலத்தை அழிக்கும் மணல் மாஃபியாக்கள்

Intro:Body:மதிப்பீடு செய்யப்பட்ட எம்சாண்ட் குவாரிகளின் பட்டியல் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மணலுக்கு மாற்றாக எம்சாண்ட் பயன்படுத்த தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. விபத்துகளை தவிர்ப்பதற்காக ஒரிஜினல் எம்சாண்ட் குவாரிகளுக்கு மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இதுவரை 216 குவாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட குவாரிகளின் பட்டியலே பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது. அதில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் எம் சாண்டு குவாறிகளுக்கு கடிதம் எழுதி மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த குவாரிகளில் பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து எம் சாண்டை 9 துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை பரிசோதித்த பின்னரே மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எம் சாண்ட் தொடர்பாக புகார் எழுந்தால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். இதில் முறைகேடு இருந்தால் சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குவாரிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்த பட்டியலில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலகம் கலெக்டர் அலுவலகம் சார்ந்த அலுவலகங்களிலும் இதை பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவதோடு ஒரிஜினல் என் தந்தை பெற வழிவகை செய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.