இதுதொடர்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், தங்களுடைய கட்சி பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரம் பெறாத கட்சியாக தமிழ்நாட்டில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.
அங்கீகாரம் பெறாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது, ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படுவதால், உரிய அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும், தங்கள் கட்சிக்கு ஒரே சின்னமாக தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரியிருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புதிய தமிழகம் சார்பில் முன்பே மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரே சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் தலைவர், மாநிலத் தேர்தல் ஆணையத்தில் அளித்த கோரிக்கையை பரிசீலித்து, முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது